Saturday, August 30, 2014

கூடிக்களித்தலும்
தீராத்தனிமையும்
செல்வந்தராதலும்
வறுமையில் வாட்டுவித்தலும்
ஒன்றாலேயே என்று உணர்

இதில் ஏது
என் குற்றம்
 ஆண்களின் கண்கள்
 உடை அவிழ்த்துப்பார்க்க
கேட்டா வாங்கிவந்தேன்
இவ்வுடம்பை


Friday, August 29, 2014

தொழில்

இரண்டு நாள் முன்
கந்து வட்டிக்கு வாங்கி
களிமண் பதம் சேர்த்து
இரவெல்லாம் கண் விழித்து
பிள்ளையார் பிடித்து
வண்ண வண்ண கோடை செய்து
எருக்களை மாலையுடன்
விடியல் முதல்
வழி பார்த்து
மனையுடன் வருபருடன்
பேரம் பேசி
போட்ட முதல் தேறுமா
என்றிருக்க

இரவெல்லாம் குடித்து
வேசியுடன் புணர்ந்து
மெதுவாய் கண் விழித்து
அவசரமாய்  குளி த்து
விநாயகர் அகவல்  சொல்லி
மனையுடன் கூட்டதில் சேர்ந்து
நாலாவது தேறுமா
என்று கணக்கு போட்டான்
கைபேசி திருடுபவன் .

                                 -    பயணி

Wednesday, August 27, 2014

படித்ததில் பிடித்தது 2.


என்னுள்  எங்கோ  மறைந்திருக்கும்
மூதாதையர் குகையின்
ஏதோ  ஒரு மூலையில்
அமைந்திருக்கும்
தொன்ம ஆசைகளின்  சேகர அறையிலிருந்து
வினோத ஆசையொன்று
கால  விமோசனத்தில்
உயிர்பெற்று  உலவத் தொடங்கி
என்  கனவுப் பிரதேசத்துக்குள் புகுந்து
கும்மாளமடிக்கிறது .

ஆதிவேட்கையின்
காட்டுத்தன்மை காரணமாக
சுபாவமாய்  அது என்னுள்
பற்றி  எரிந்து கொண்டிருக்கிறது
அதன் வெக்கையில் தகிக்கிறது
உடலும் மனமும்.

இனி
மூதாதையர் பரிசாக
ஒரு  தண்டனையோ களங்கமோ
வந்தென்னைச் சேரக்கூடும்
வணங்கி ஏற்பதைத்  தவிர
வழியேதுமில்லை .


                                                        - சி.மோகன் (தண்ணீ ர் சிற்பம்)