Monday, September 25, 2017

படித்ததில் பிடித்தது

படித்ததில்  பிடித்தது

உறுதியானவர்கள்தான்  எளிதில்  உடையக்ககூடியவர்களாகவும்  இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாஇடங்களிலும்  ஆறுதலை எதிர்பார்ப்பதில்லை.

எதிர்பார்க்கிற இடங்களில் எதிர்கொள்ளும்  நிராகரிப்புகள்தான்  வீழித்துவிடுகின்றன.

                                       - சொல் அல்ல செயல்  - அதிஷா

Thursday, August 17, 2017

படித்ததில் பிடித்தது

கடைசிவரை எல்லா
ஆண்பெண்  விளையாட்டும்,
வயிற்றுக்கும் மனத்துக்குமான
இழுபறிதான்  இடையில்
இந்த மூளை விடுகிற
வெற்றுச்சவால்களும்,
ஆடத்தூண்டுகிற
பகடையாட்டங்களும், எந்தச்
சூதாடியும் நிஜத்தில் தோற்று,
கனவில் ஜெயித்து, நிறுத்த
முடியாத ஆட்டத்த்தில்
நிலைகுலைகிறான்.
தோற்றவன் கண்களில்
ஜெயித்தவனைவிட ஜெயம்
மட்டுமே அதிகம்
மினுங்குகிறது.
                    
                - வண்ணதாசன்


Wednesday, March 1, 2017

காலப் பெருவெளியில்
கரைந்துகொண்டிருக்கிறது
அவளின் பெருங்காமம்
பொருள் தேடச் சென்றவனின்
குருதியில்
நீர்த்துக் கிடக்கிறது
காமத்தின் வலி

எதுகுறித்தும் பேசாமல்
உருள்கிறது பூமி
காமத்துக்கு
ஆயுள் எழுதும்
மருந்துகள் இதுவரை இல்லை!
                              - நாச்சியாள் சுகந்தி

Thursday, August 11, 2016


எல்லாம்  இறுதியில்  பழகிப்போய்விடும்
நினைவில் உள்ளதா
ஏமாற்றத்தின்  துரோக முட்கள்
உன்னைக்  கிழித்த அம்முதல் நாளை
எப்படி உரக்கக் கூவினாய்!
யாரோ
கூக்குரல் கேட்டு வருவார் என்பதாய்
எவ்வளவு விரைவில்  தெரிந்துகொணடாய்
பதிலில்லாக் கேள்வி  உன் கூக்குரலென்று
கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப்போய்விடும்
                                                      - ஞானக்கூத்தன்



https://www.youtube.com/watch?v=97N5B-Qb0HQ

Saturday, December 19, 2015

ஏதோ ஒரு வேளையில்
கனவுகள்  மெய் பட்டுவிடக்கூடுமென
அகதிகளாய்
நலம், சுகங்கள் மறுக்கப்பட்டு
தலையணை நனைத்த
இரவுகளுக்காக
பார்வைகளால்  அள்ளி வீசப்பட்ட
அவமானங்களால்
தண்ணீரில் கண்ணீர் விடுதலும்
தடை செய்யப்பட்டு
காற்று கண்ணீர்  துடைக்கும்
வேகத்தில் அழுகை
பழகிக்கொளல்

Monday, December 14, 2015

சாட்சிகள்
இல்லா செயல்கள்
குற்றங்களாவதில்லை

கொன்றுகொண்டிருக்கிறேன்
மனசாட்சியை