Saturday, November 15, 2014

Thursday, November 13, 2014

வளைவுகளில்
விரல்கள் ஊர
உன் பெயர் என்ன
காதில் கிசுகிசுத்தான்
அவளும் கிசுகிசுத்தாள்
உனக்கு என்ன பெயர்
பிடிக்குமோ அதையே
வைத்துக்கொள்
இதுவும் கடந்து போகும்

Monday, November 10, 2014

காமத்தில்
மனம் பேதலிக்க
பயத்தில்
நல்லவர்களாய்

Saturday, November 8, 2014

தத்வமஸி
நீ, அது
வேத மஹா வாக்கியம்
குழப்பமில்லை

நீயே அதுவா
அதுதான் நீயா

நீயும் அதுவும்  இரண்டல்ல
அதுவும் நீயும் வெவ்வேறு
நீ, அதுவாக மற்றொன்றின்
தயை ஆக மூன்று

சங்கரர், மாத்துவர் மற்றும் இராமானுஜர்
குழப்பவாதிகள்

குழப்பமில்லாமல் தெளிவில்லை

 இரண்டல்ல, வெவ்வேறு மற்றொன்று
எம் மார்க்கம் உண்மை அறிய
சிந்திக்க ஆரம்பி
மூன்று பிறவியாவது ஆகாலாம்

முடிவு கொண்டபின் வழி நட
எதோ ஒரு பிறவியில்
சித்தித்க்கலாம் 



Friday, November 7, 2014

அதிலிருந்து
இதுவந்ததா
இல்லை இதிலிருந்து
அதிலிருந்து
இது வந்ததா
காதலும்
காமமும்
அந்த இடத்தில்
உனக்கு எது உகந்ததோ
காரியம் நடத்து அதை வைத்து
ஆதலினால் கா... செய்வீர்

Thursday, November 6, 2014

இயலாமைகளின்
எச்சங்களை
ஏற்றுக்கொள்ள
பழகுவதாய்
வாழ்க்கை
தோன்றியதை
சொல்லிவைத்தேன்
தரம் பிரிப்பது
உன் கடன்
காமத்தில் இருந்தது
கடவுள் வரை
காட்டும் கண்கள்
மெலிதான சோகம்
பேசும் கண்கள்
மட்டும் மனம்
புகுந்தது
மாயம் செய்யும்கவிதையாய்
லக்ஷ்மி லக்ஷ்மி
என்று  அழைத்துக்கொண்டே
இருந்தேன்
கேட்டும் பாரமல்
இருவரும் 
அவன் சொன்னான்
அவளும் சொன்னாள்
சோகத்தில் இருவர்

Wednesday, November 5, 2014

ஒரு புத்தகம்
சிறிதளவு விஸ்கி
மெல்லிய இசை
இதுகூடவா பேராசை
ஏமாற்றமே மிஞ்ச 
ஓ அந்த
மகிழ்ச்சியான
நாட்கள்

இவையும்
நிகழ்காலமாய்
இருந்தவை தானே
காதலில்
இனித்த முத்தம்
மணம் முடிந்ததும்
கடமையானதேன்

Sunday, November 2, 2014

நான் நகுலனில்லை
இருவரிக்கவிதையில்
ஞான ப்பொருள் உரைத்து
சிந்த்திக்க வைக்க

நாலு வரி உளறல்களிரிந்து
நகுலனை நோக்கி பயனிக்ககிறேன்

குடியரசானோம்
விடுதலை பெற்றோமா
வெள்ளியாய்ரிடத்தில்
சக மனிதர்கள்

Saturday, November 1, 2014

வாங்குபவரும்
விற்ப்பவரும்
ஒத்துக்கொள்ளும்
நிலை விலையென்று
கற் றுக்கொடுக்கிறது
பொருளாதாரக் கோட்பாடு

சுக்கிரப் பெண்ணே நீ
மட்டும் ஏன்
பழிக்கப்படுகிறாய்
ஆண்கள் மன்னிக்கப்
படும்போது