Saturday, December 19, 2015

ஏதோ ஒரு வேளையில்
கனவுகள்  மெய் பட்டுவிடக்கூடுமென
அகதிகளாய்
நலம், சுகங்கள் மறுக்கப்பட்டு
தலையணை நனைத்த
இரவுகளுக்காக
பார்வைகளால்  அள்ளி வீசப்பட்ட
அவமானங்களால்
தண்ணீரில் கண்ணீர் விடுதலும்
தடை செய்யப்பட்டு
காற்று கண்ணீர்  துடைக்கும்
வேகத்தில் அழுகை
பழகிக்கொளல்

Monday, December 14, 2015

சாட்சிகள்
இல்லா செயல்கள்
குற்றங்களாவதில்லை

கொன்றுகொண்டிருக்கிறேன்
மனசாட்சியை

Saturday, January 17, 2015

புதிதாய்
ஏதுமில்லை
அதே
புதுப்புது
பரிமானமாய்
மீண்டும் மீண்டும்
காலத்தின் நீட்சியில்

Thursday, January 15, 2015

இறையிடம் 
கொடுப்பதற்கு
ஒன்றுமில்லை
 எனக்கு கேட்பதற்கும்
ஒன்றுமில்லை
வாழ்வின்
அர்த்தங்களும்
அனர்த்தங்களும்
ஆனந்தத்தையும்  தவிர