படித்ததில் பிடித்தது 2.
என்னுள் எங்கோ மறைந்திருக்கும்
மூதாதையர் குகையின்
ஏதோ ஒரு மூலையில்
அமைந்திருக்கும்
தொன்ம ஆசைகளின் சேகர அறையிலிருந்து
வினோத ஆசையொன்று
கால விமோசனத்தில்
உயிர்பெற்று உலவத் தொடங்கி
என் கனவுப் பிரதேசத்துக்குள் புகுந்து
கும்மாளமடிக்கிறது .
ஆதிவேட்கையின்
காட்டுத்தன்மை காரணமாக
சுபாவமாய் அது என்னுள்
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
அதன் வெக்கையில் தகிக்கிறது
உடலும் மனமும்.
இனி
மூதாதையர் பரிசாக
ஒரு தண்டனையோ களங்கமோ
வந்தென்னைச் சேரக்கூடும்
வணங்கி ஏற்பதைத் தவிர
வழியேதுமில்லை .
- சி.மோகன் (தண்ணீ ர் சிற்பம்)
என்னுள் எங்கோ மறைந்திருக்கும்
மூதாதையர் குகையின்
ஏதோ ஒரு மூலையில்
அமைந்திருக்கும்
தொன்ம ஆசைகளின் சேகர அறையிலிருந்து
வினோத ஆசையொன்று
கால விமோசனத்தில்
உயிர்பெற்று உலவத் தொடங்கி
என் கனவுப் பிரதேசத்துக்குள் புகுந்து
கும்மாளமடிக்கிறது .
ஆதிவேட்கையின்
காட்டுத்தன்மை காரணமாக
சுபாவமாய் அது என்னுள்
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
அதன் வெக்கையில் தகிக்கிறது
உடலும் மனமும்.
இனி
மூதாதையர் பரிசாக
ஒரு தண்டனையோ களங்கமோ
வந்தென்னைச் சேரக்கூடும்
வணங்கி ஏற்பதைத் தவிர
வழியேதுமில்லை .
- சி.மோகன் (தண்ணீ ர் சிற்பம்)

No comments:
Post a Comment