Friday, August 29, 2014

தொழில்

இரண்டு நாள் முன்
கந்து வட்டிக்கு வாங்கி
களிமண் பதம் சேர்த்து
இரவெல்லாம் கண் விழித்து
பிள்ளையார் பிடித்து
வண்ண வண்ண கோடை செய்து
எருக்களை மாலையுடன்
விடியல் முதல்
வழி பார்த்து
மனையுடன் வருபருடன்
பேரம் பேசி
போட்ட முதல் தேறுமா
என்றிருக்க

இரவெல்லாம் குடித்து
வேசியுடன் புணர்ந்து
மெதுவாய் கண் விழித்து
அவசரமாய்  குளி த்து
விநாயகர் அகவல்  சொல்லி
மனையுடன் கூட்டதில் சேர்ந்து
நாலாவது தேறுமா
என்று கணக்கு போட்டான்
கைபேசி திருடுபவன் .

                                 -    பயணி

No comments: